சித்திரையில் வரும் புயல் ஆபத்தானது - பாரம்பரிய கணிப்பு மூலம் மீனவர்கள் அச்சம்

Cyclone Fani | தற்போது ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தை பார்த்தால் கடந்த சில வருடங்காக தவறிப்போன சித்திரை புயல் இந்த முறை தப்பாது என்று மீனவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

சித்திரையில் வரும் புயல் ஆபத்தானது - பாரம்பரிய கணிப்பு மூலம் மீனவர்கள் அச்சம்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: April 25, 2019, 11:06 AM IST
  • Share this:
புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சித்திரை புயல் ஆபத்தானது என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயலாக மாறி 30-ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் லேசான சீற்றத்துடன் காணப்படுகிறது. அப்பகுதி மீனவர்கள் இந்த சீற்றத்தை புயலுக்கான எச்சரிக்கையாகக் கருதுகிறார்கள்.

அதே சமயம் கோடைகாலத்தில் வெப்பம் காரணமாக அழுத்தம் அதிகமாக இருப்பதால் சிறிய அளவு காற்றழுத்த தாழ்வு நிலை கூட புயலாக மாறுவது போன்ற தோற்றத்தை தர வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

மேலும் கோடை காலத்தில் புயல் வருவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று  கருதப்பட்டாலும், இதுகுறித்து  மீனவர்களிடம் கேட்கும் போது, தங்களின் பாரம்பரிய கணிப்பு முறைகளின் படி சித்திரை புயல் ஆபத்தானது என்றே கூறுகின்றனர்.

fisherman | ராமேஸ்வரம் மீனவர்கள்
மீனவர்கள்


மேலும், தங்கள் கணிப்பு முறை சுனாமிக்கு பிறகான நாட்களில் சில சமயம் தவறி இருக்கலாம். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தை பார்த்தால் கடந்த சில வருடங்காக தவறிப்போன சித்திரை புயல் இந்த முறை தப்பாது என்று மீனவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

First published: April 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading