Home /News /tamil-nadu /

ஏற்றுமதிக்கு வழிவகை செய்யவேண்டும்: மீன்பிடிக்கச் செல்லாமல் காத்திருக்கும் மீனவர்கள்

ஏற்றுமதிக்கு வழிவகை செய்யவேண்டும்: மீன்பிடிக்கச் செல்லாமல் காத்திருக்கும் மீனவர்கள்

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

மீன்களின் இனப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கிழக்குக் கடலோர மாநிலங்களில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் 68 நாட்களை தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்ட மீனவர்கள் மீன்பிடித் தடை காலமாகவும், ஊரடங்கு உத்தரவாகவும் கடைபிடித்து வந்தனர். இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், இன்று முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பை ஒட்டுமொத்த மீனவர்களும் வரவேற்காத நிலையில், ஏற்றுமதி ரகமான இறால், நண்டு, கணவாய், மீன்களை கொள்முதல் செய்ய வழிவகை இல்லாததால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதன் காரணமாக நாகை, தரங்கம்பாடி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட துறைமுகங்களில் 2,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கினால் தம் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்கள், தற்போதைய சூழலில் கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்குத் தேவையான டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதிய பணம் இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை எடுத்துச் செல்ல, கார்கோ விமான போக்குவரத்தை மத்திய, மாநில அரசுகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Fisherman, Nagapattinam

அடுத்த செய்தி