Home /News /tamil-nadu /

கடலில் தத்தளித்த மானை படகில் சென்று மீட்ட மீனவர்கள்

கடலில் தத்தளித்த மானை படகில் சென்று மீட்ட மீனவர்கள்

நாகையில் கடலில் தத்தளித்த மான்

நாகையில் கடலில் தத்தளித்த மான்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதியில் நடுக்கடலில் தத்தளித்த புள்ளிமானை படகில் சென்று அப்பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், நரி முயல் குதிரை என வனவிலங்குகள் உள்ளன. தற்போது நிலவி வரும் கோடை வெயிலுக்கு குடிதண்ணீருக்காக மான்கள் அவ்வப்போது சரணாலயத்தை விட்டு வெளியில் வந்து விடும், அவல நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், சரணாலயத்தை விட்டு வெளியான ஆண் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்தியதில், அந்த புள்ளிமான் கடலில் இறங்கியது. கரையிலிருந்து ஒரு, கிலோமீட்டர் தொலைவிற்கு ஆழமான பகுதியில் அந்த மான் நீந்திக் கொண்டிருந்தது.

அப்போது கோடிக்கரையில் இருந்து பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த ஜோசப் மற்றும் மீனவர்கள், கடலில் மான் நீந்திக் கொண்டிருப்பதை கண்டனர். அதை காப்பாற்றும் முயற்சியாக அந்த மான் அருகே சென்று மானை பிடித்து தங்களது படகுடன் இணைத்து கரைக்கு கொண்டுவந்து கரையருகே விட்டனர்.

அந்தப் புள்ளிமான் துள்ளிக்குதித்து சரணாலயத்திற்குள் தப்பிப் பிழைத்து ஓடியது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see...

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: Nagai district

அடுத்த செய்தி