தன்னைப்பார்த்து குரைத்ததால் சில்லி சிக்கனில் விஷம் கலந்து 18 நாய்களை கொன்ற மீன் வியாபாரி!
தெருநாய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததே மீன்வியாபாரி கோபாலை கொலை செய்ய தூண்டியுள்ளது.

நாய்கள் - கோப்புப் படம்
- News18
- Last Updated: May 31, 2019, 9:08 AM IST
மீன்விற்பனை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது தினமும் தன்னைப்பார்த்து குரைத்து தொல்லை கொடுத்துவந்த 18 நாய்களை விஷம் வைத்து கொன்ற மீன் வியாபாரியை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மீன் வியாபாரியின் எதிரியாக நாய்கள் மாறியது எப்படி?
திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்துவரும் இவர் கோபால். மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, தினமும் இரவு வீட்டிற்கு வரும் வழியில், இவர் மீது மீன் வாடை அடித்து வந்ததால் அப்பகுதியில் இருந்த நாய்கள் இவரை பார்த்து குரைத்துள்ளன. அதே பகுதியில், வசித்து வரும் தன்னை தினமும் பார்த்தாலும், இரவு நேரத்தில் குரைப்பதை நாய்கள் நிறுத்தவில்லை என்பதால் கோபால் ஆத்திரமடைந்துள்ளார்.
வண்டியை நிறுத்திவிட்டு, சில நேரங்களில் நாய்களைக் கோபால் தாக்கியுள்ளார். சில சமயங்களில் நாய்களிடம் கடியும் வாங்கியுள்ளார்.
சண்டை தொடர்ந்து வந்ததால், வெறிகொண்ட நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட மீன் வியாபாரி கோபால் முடிவு செய்தார். நண்பரின் உதவியுடன் வாங்கிய விஷத்தை சில்லி சிக்கனில் கலந்து நள்ளிரவில் நாய்களுக்கு உணவாக கொடுத்துள்ளார்.விஷம் கலந்த சில்லி சிக்கன் நாய்களுக்கு கொடுத்த கோபால்
கோபால் நாய்களுக்கு விஷம் கலந்த சில்லி சிக்கனை கொடுத்த காட்சிகளும், அவற்றை உண்ட பிறகு, நாய்கள் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் சிசிடிவிகளில் பதிவாகியுள்ளன.
அடுத்தநாள், நாய்களின் மரணத்தில் சந்தேகமடைந்த உரிமையாளர்கள், அவற்றின் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் விஷம் கொடுத்து நாய்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அப்பகுதியில் உள்ள மீன்வியாபாரி கோபால் என்பது தெரியவந்தது.
சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் சிக்கிய கோபால்
இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் கடந்த 26-ம் தேதி புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் விசாரித்த திருப்பூர் வடக்கு போலீசார் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மீன் வியாபாரி கோபாலை தனிப்படை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
தெருநாய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததே மீன்வியாபாரி கோபாலை கொலை செய்ய தூண்டியுள்ளது.
தெருநாய் தொல்லை அதிகம் இருந்தால் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், மாறாக, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, நாய்களை கொலை செய்யக்கூடாது என்றும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Also see... EXCLUSIVE: புதிய முறையில் குடிநீர் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள குடிநீர் வாரியம்
Also see...
மீன் வியாபாரியின் எதிரியாக நாய்கள் மாறியது எப்படி?
திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்துவரும் இவர் கோபால். மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, தினமும் இரவு வீட்டிற்கு வரும் வழியில், இவர் மீது மீன் வாடை அடித்து வந்ததால் அப்பகுதியில் இருந்த நாய்கள் இவரை பார்த்து குரைத்துள்ளன.
வண்டியை நிறுத்திவிட்டு, சில நேரங்களில் நாய்களைக் கோபால் தாக்கியுள்ளார். சில சமயங்களில் நாய்களிடம் கடியும் வாங்கியுள்ளார்.
சண்டை தொடர்ந்து வந்ததால், வெறிகொண்ட நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட மீன் வியாபாரி கோபால் முடிவு செய்தார். நண்பரின் உதவியுடன் வாங்கிய விஷத்தை சில்லி சிக்கனில் கலந்து நள்ளிரவில் நாய்களுக்கு உணவாக கொடுத்துள்ளார்.விஷம் கலந்த சில்லி சிக்கன் நாய்களுக்கு கொடுத்த கோபால்
கோபால் நாய்களுக்கு விஷம் கலந்த சில்லி சிக்கனை கொடுத்த காட்சிகளும், அவற்றை உண்ட பிறகு, நாய்கள் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் சிசிடிவிகளில் பதிவாகியுள்ளன.
அடுத்தநாள், நாய்களின் மரணத்தில் சந்தேகமடைந்த உரிமையாளர்கள், அவற்றின் சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் விஷம் கொடுத்து நாய்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அப்பகுதியில் உள்ள மீன்வியாபாரி கோபால் என்பது தெரியவந்தது.
சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் சிக்கிய கோபால்
இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் கடந்த 26-ம் தேதி புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் விசாரித்த திருப்பூர் வடக்கு போலீசார் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மீன் வியாபாரி கோபாலை தனிப்படை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
தெருநாய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததே மீன்வியாபாரி கோபாலை கொலை செய்ய தூண்டியுள்ளது.
தெருநாய் தொல்லை அதிகம் இருந்தால் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், மாறாக, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, நாய்களை கொலை செய்யக்கூடாது என்றும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Also see... EXCLUSIVE: புதிய முறையில் குடிநீர் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள குடிநீர் வாரியம்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.