ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடலுக்கு போகாதீங்க.. மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று.. புதிய எச்சரிக்கை!

கடலுக்கு போகாதீங்க.. மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று.. புதிய எச்சரிக்கை!

கோப்பு படம்

கோப்பு படம்

ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள், அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்பட்டனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  இன்று முதல் அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  நேற்று கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் கடல் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  எனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று (09.11.2022) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள், அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்பட்டனர். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

  டெல்லியில் கடும் நில அதிர்வு.. நேபாள நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு! (news18.com)

  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:

  09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கைcuud மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

  12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

  சென்னையை பொறுத்தவரை:

  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Warning for fisherman, Weather News in Tamil