முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ராமேஸ்வரம், பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை - மீன்வளத்துறை அமைச்சர்

ராமேஸ்வரம், பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை - மீன்வளத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

TN Assembly : ராமேஸ்வரம் மற்றும் பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ராமேஸ்வரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இராமேஸ்வரம் பகுதியின் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இராமேஸ்வரத்தில் 780 மீன்பிடி படகுகளும், 1118 நாட்டுப் படகுகளும் உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு நிர்வாக ரீதியாக 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Must Read : புறவழிச் சாலைகள் விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு : தூக்குகயிறு மாட்டியும், சங்கு ஊதியும் விவசாயிகள் போராட்டம்

மேலும் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதே போல ஏரியின் முகத்துவாரத்தை படகுகள் வந்து செல்ல ஏதுவாக அதனை சீரமைப்பதற்க்காக 26.85 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

First published:

Tags: Fishermen, TN Assembly