திமுக உடையும் தருணம் வந்துவிட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று யாரும் கூறவில்லை. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டது. அது தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். இதை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி. இந்நிலை மாறாது. இதுவே அதிமுகவின் முடிவு.
கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியில் இருப்பதை பா.ஜ.க மறுக்கவில்லை. தேசிய தலைமை கூறும் போது தான் அதை அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் ஆளப்போகும் கட்சி அதிமுக தான். முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தி மு க விற்கு ஆட்சி எட்டாத கனி; கானல் நீர்; மு.க.அழகிரியே தெளிவு படுத்தி உள்ளார். திமுக முடிந்து போன அத்தியாயம். திமுக முன்னணி தலைவர்களுக்கு யோகா கலை இருப்பதால் வெளியில் யோகா பயிற்சி செய்து வருகின்றனர்.
திமுக முன்னணி தலைவர்கள் படம் போடக்கூடாது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் படம் போடலாமா? திமுக உடையும் தருணத்துக்கு வந்துவிட்டது. ஆயுள் முழுக்க போஸ்டர் மட்டுமே ஸ்டாலினால் அடிக்க முடியுமே தவிர முதல்வராக முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷ்ன் அறிமுகம் செய்தது திமுக தான். ஸ்டாலின் உத்தமன் போல் பேசுவதை மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
Also read... Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?
மேலும், பொங்கல் தொகுப்பு மீண்டும் அரசு கஜானாவுக்கு வரும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசர் பேசியது குறித்த கேள்விக்கு, திண்டுக்கல் சீனிவாசன் மூத்த அமைச்சர். அவர் வாய் தவறி பேசிவிச்சார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தில்லை என அமைச்சர் பதிலளித்தார்.
மேலும், திரையரங்குகள் முழுமையாக திறக்கப்படுவதால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காதா என்ற கேள்விக்கு, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை அடிப்படையிலேயே அரசு முடிவெடுத்து வருகிறது. அதன்படி தான் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.