Home /News /tamil-nadu /

"லொடுக்கு பாண்டி கருணாஸ் நாக்குல சனி": அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

"லொடுக்கு பாண்டி கருணாஸ் நாக்குல சனி": அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    லொடுக்கு பாண்டி கருணாஸ்க்கு நாக்குல சனி அதனால் தான் சாதி ரீதியாக பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ., கருணாஸ் அவர்களில் நாக்கில் சனி அதனால் தான் அவர் சர்ச்சைக்குறிய கருத்துகளை கூறி வருகிறார். இதற்காக அவர் என்ன விளைவுகளை சந்திக்க போகிறார் என்பது தெரியவில்லை.

    மேலும், எதிர்க்கட்சியான திமுக தற்போது பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. பொதுமக்களை பாதிக்கும் வன்முறைகளை கையில் எடுத்து வருவதற்கே திமுகவிற்கு நேரம் சரியாக உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

    அதிமுக அரசை மட்டும் குறை கூறுவது ஸ்டாலின் அவர்களுக்கு வழக்கமாகி விட்டது. சற்று பின்னோக்கி பார்த்தால் ஊழலின் மொத்த உருவமாக ஸ்டாலினின் குடும்பம் இருப்பது தெரியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

    மேலும் இலங்கையில் இனப்படுகொலையின் போது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ்சும் திமுகவும் சேர்ந்து செய்தது தான் இந்த இனப்படுகொலை இதை நாங்கள் சொல்லவில்லை ராஜபக்சே டெல்லி வந்த போது கூறியதாகவும் அவர் கூறினார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor karunas, Congress thirunavukarasar, Dmk leader stalin, Karunas

    அடுத்த செய்தி