• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல் போராட்டம்

கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல் போராட்டம்

Youtube Video

காணமல்போன தமிழக மீனவர்கள் 4 பேரில் 2 பேர் இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சடலங்களை ஒப்படைக்கக் கோரி மீனவர்கள் கோட்டைப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

  • Share this:


    இலங்கை ரோந்து படகு மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து திங்கள்கிழமை காலை 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய சேசு (50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மெசியா (30) உச்சிபுளியைச் சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார் மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    கோட்டைபட்டினத்திலிருந்து 214 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் 213 விசைப்படகுகள் கரை திரும்பினர். ஆனால் ஆரோக்கிய சேசுவிற்கு சொந்தமான விசைப்படகில் சென்று நான்கு பேரும் கரை திரும்பவில்லை.

    இதுகுறித்து சக மீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆரோக்கியசேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் படகு கடலுக்குள் மூழ்கி 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிய வந்தது.

    மேலும் படிக்க...கிருஷ்ணகிரியில் பாலியல் பேரத்திற்காக ரூ 200 க்கு தொடங்கிய சண்டை.. கொலையில் முடிந்தது எப்படி?..

    இதனிடையே இலங்கை ரோந்து படகு மோதி பலியான நான்கு மீனவர்களின் மெசியா, செந்தில்குமார் இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.மொத்தம் 4 மீனவர்களையும் மீட்டு சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஒப்படைக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஆயிரம் மீனவர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

     







    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: