ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல்லூரி படிப்பை எட்டிப் பிடித்த பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தை சேர்ந்த முதல் பெண்..!

கல்லூரி படிப்பை எட்டிப் பிடித்த பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தை சேர்ந்த முதல் பெண்..!

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  விழுப்புரம் மாவட்டத்தில் பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், முதன்முறையாக கல்லூரி படிப்பை எட்டி பிடித்து சாதனை படைத்திருக்கிறார். கல்வியால் எதையும் சாதிக்கலாம் என்ற உண்மையை அவர் நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளார். 

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஆலங்குப்பம், இந்த கிராமத்தில் அமைந்துள்ள இந்திராநகர் குடியிருப்பு பகுதி. இந்த குடியிருப்பு பகுதில் இருபதுக்கும் மேற்பட்ட ஆதியின பூம் மாட்டுக்காரர் சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். ஆதியின பூம் மாட்டுக்காரர் சமூகத்தை சேர்ந்த மாணவி பாத்திமா இந்த சமூகத்தில் இருந்து முதல்முறையாக கல்லுரி படிப்பை தொட்டுள்ளார்.

  பாத்திமாவின் தந்தை ரவி தற்போது பாத்திரம் விற்பனை செய்து வருகிறார். இவர் காலையில் ஆறு மணிக்கு சென்று பாத்திரங்களை விற்பனை செய்து கொண்டு வரும் பணத்தில் தான் பாத்திமா கல்லூரிக்கு செல்ல முடியும். மாத்திமா மட்டுமல்ல அவரது இரண்டு தம்பிகளும் பள்ளிக்கூடம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

  பாத்திமா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் படித்தது போதும் என அனைவரும் சொன்ன போது அதனை ஏற்காத பாத்திமா பிடிவாதமாக நான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என உறுதியாக இருந்ததால் பாத்திமாவின் தந்தை ரவி பாத்திமாவை கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தார் ஆனால் அவர்களின் வறுமை அதனை தடுத்தது.

  இருப்பினும் விடாமுயற்ச்சியால் சமூக அக்கறைக்கொண்ட சிலரின் உதவியால் அதற்போது திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பாத்திமா முதலாமாண்டு பிஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இந்த சமூகத்தில் இருந்து கல்வி பயிலும் மாணவர்கள் பள்ளிப் படிப்போடு நிறுத்துக்கொள்ள, அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள், பல்வேறு சாதிய ஒடுக்குமுறை, ஒதுக்குதல், ஏளன பார்வைகள் என எல்லா உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலையில், அதனைத் தாண்டி தற்போது ஆதியின பூம் மாட்டுக்காரர் சமூகத்தில் முதல் முறையாக கல்லூரி படிப்பை எட்டிப்பிடித்திருக்கிறார் பாத்திமா.

  ”பூம் மாட்டுக்காரர் என்றாலே ஏளனமாக பார்க்கும் பார்வை மாற வேண்டும் அதற்கு ஒரே வழி கல்வி மட்டுமே. வறுமையான சூழலில் நான் படித்து வருகிறேன். இருந்தாலும் ஒருபோது படிப்பை கைவிட மாட்டேன். நான் நன்றாக படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்பதே எனது லட்சியம். கண்டிப்பாக நன்றாக படித்து இந்த சமூகத்திற்கு நல்ல முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பேன் என்பதே என் கனவு “ என்கிறார் பாத்திமா.  பாத்திமாவின் லட்சிய கனவு மட்டுமல்ல அது ஒரு சமூகத்தின் கனவு.

  தொடக்கத்தில் ஆதியின பூம் மாட்டுக்காரர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மாடுகளை தங்களின் சொல்லுக்கு கட்டுப்படும் வகையில் நன்கு பழக்கி, அலங்கரித்து, மாடுகளை வைத்து அதன் மூலம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த இவர்கள் கால மாற்றத்தின் காரணமாக தற்போது மாடுகளை வைத்து யாசம் பெருவதை கைவிட்டு அவரவருக்கு ஏற்றார் போல் தற்போது சிறிய வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

  இந்த ஆதி சமூகத்தின் கல்விக்கு தடையாக இருப்பது சாதிசான்றிதல். அரசு அதிகாரிகள் இந்த சமூகத்தினருக்கு உரிய முறையில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனபதே சமூக ஆர்வளர்களின் கருத்து.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Villupuram