தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் திருமணம் ரிஜிஸ்டர் ஆனது!

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் திருமணம் ரிஜிஸ்டர் ஆனது!
  • Share this:
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் தம்பதியினர் திருமணம் சார் பதிவளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.26 வயதான இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோவிலில் இருவரது திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் நரசிம்ம நாய்க்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஜனவரி 21 ம் தேதி இந்து திருமண சட்டத்தின் படி தங்களது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். மணமகள் தொடர்பாக அச்சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்தான வகைபாடு இடம் பெறததால் திருமணத்தை செய்ய சார் பதிவாளர் மறுத்துள்ளார்.மேலும் மணிகண்டனின் பிறப்பு தேதி சான்றிதழ்களில் மாறி மாறி இருப்பதாகவும், இதுதொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் எனவும் சார் பதிவாளர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகததில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் மேல் முறையீடு மனு அளித்தனர்.


இதுதொடர்பாக மாநில பதிவுத்துறை தலைவர் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசணை பெற்றுள்ளார். அப்போது இந்து திருமண சட்டத்தில் மூன்றாம் பாலினத்தனவரை மணமகன் அல்லது மணமகள் என்ற வகைப்பாட்டின் கீழ் சேர்த்து கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி திருமண பதிவு செய்யவும், மணிகண்டனின் பிறப்பு சான்றிதழ் தேதிப்படி பதிவு செய்யவும் வடவள்ளி சார் பதிவாளருக்கு கோவை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை - இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்