தி.மு.கவுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்

தி.மு.கவுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்

அண்ணா அறிவாலையம்

தி.மு.கவுடன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

 • Share this:
  தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு அமைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.க அதனுடைய கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிகளும் 2 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது.

  இந்தநிலையில் இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்துகிறது. தி.மு.க தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் எ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதிருப்தியுடன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிள் வெளியேறினர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகள் கேட்டதாகவும், தி.மு.க 7 தொகுதிகள் மட்டும் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

  அதனைத் தொடர்ந்து, தி.மு.கவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகைதந்துள்ளனர்

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: