ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது

தமிழக அரசு

தமிழக அரசு

, திமுக சார்பில் சபாநாயகர் தேர்தலில் அப்பாவும், துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி நேற்று அறிவித்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏ-க்கள் அனைவரும் இன்று பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகரான பிச்சாண்டி, பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும், அவரை தொடர்ந்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

  இதையடுத்து, நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

  சட்டசபை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர், இன்று நண்பகல் 12 மணிக்குள் வேட்பு மனு தாகக்ல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, திமுக சார்பில் சபாநாயகர் தேர்தலில் அப்பாவும், துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி நேற்று அறிவித்தது. சபாநாயக் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், அப்பாவு சபாநாயகராகவும், பிச்சாண்டி துணை சபாநாயகராகவதும் உறுதியாகியுள்ளது.

  அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டதாக, அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி. காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, DMK, TN Assembly