ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்.. என்னென்ன நன்மைகள்!

தமிழகத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்.. என்னென்ன நன்மைகள்!

தமிழகத்தில் வரவுள்ள இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்

தமிழகத்தில் வரவுள்ள இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்

விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பூச்சிகளை தேவாங்குகள் உண்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவற்றின் இருப்பு விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவிலேயே முதன்முறையாக, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் பகிர்ந்து கொள்ளும் பகுதியில், கடுவூர் தேவாங்கு சரணாலயம் அமைக்க, தமிழகம் தயாராகி வருகிறது. 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 26 (A) (1) (b) இன் கீழ் தமிழ்நாடு அரசு சரணாலயத்தை அறிவித்துள்ளது.

தேவாங்கு (Slender loris) என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும்.சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும்.

இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18-26 செ.மீ் ( 7-10 அங்குலம்) நீளமும் 85-350 கி எடையுமே உள்ள சிறு விலங்கு. பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும்.

நிலாவையும் நட்சத்திரங்களையும் ஜாலியா ரசிக்கலாம்... சுற்றுலாவை தொடங்க ராஜஸ்தான் அரசு திட்டம்

கடுவூர் ஸ்லெண்டர் லோரிஸ் சரணாலயம்

கடவூர் தேவாங்கு சரணாலயம் திண்டுக்கல்லில் வேடசந்தூர், திண்டுக்கல் கிழக்கு மற்றும் நத்தம் தாலுகாக்களையும், கரூர் மாவட்டம் கடவூர் பகுதியையும் உள்ளடக்கி 11,800 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ளது.

நன்மைகள் என்னென்ன?

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) அழிந்துவரும் உயிரின பட்டியலில் உள்ள மெல்லிய தேவாங்கு, ஆரோக்கியமான நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இனம் சிறிய அளவினதாக இருக்கலாம். ஆனால் அவை விவசாய பூச்சிகளை இயற்கையாக வேட்டையாடுவதில் சர்வ வல்லமை பெற்றதாக இருக்கிறது.

விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பூச்சிகளை தேவாங்குகள் உண்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவற்றின் இருப்பு விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு - பொது அறிவுத் தாளை அணுகுவது எப்படி?

இதைக் கருத்தில் கொண்டு, இந்த இனத்தைப் பாதுகாக்க வேண்டிய உடனடித் தேவை உணரப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவற்றின் வசிப்பிட இழப்பு, வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பாக இருக்கக்கூடிய இயற்கையான வாழ்விடத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், தமிழக அரசு பால்க் சந்திப்பில் இந்தியாவின் முதல் துகோங் எனும் கடல்பசு பாதுகாப்புக் காப்பகம், அகஸ்தியமலையில் (திருநெல்வேலி) யானைகள் காப்பகம், திருப்பூரில் நஞ்சராயன் தொட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் வில்லிபுரத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை உருவாகும் திட்டங்களையும் அறிவித்தது. மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் 13 சதுப்பு நிலப் பகுதிகள் சமீபத்தில் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Dindigul, Karur, Sanctuary