முதல் கணவர் குழந்தையை கடித்து சித்ரவதை.. இரண்டாவது கணவர் வக்கிரம்.. தாயும் உடந்தை.. சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த 7 வயது சிறுவனை, இரண்டாவது கணவர் கொடூரமாகக் கடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார். சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் 34  வயதான சசிகலா இவருக்கும் முதல் கணவருக்கும் பிறந்த 3 குழந்தைகளில் 2 குழந்தைகள் இவரது தங்கை பாதுகாப்பில் உள்ளனர். 3-வதாக பிறந்த 7 வயது சிறுவன் அனிஷ்க்கன்னை சசிகலா வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக தக்கலையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் சசிகலா சேர்ந்து காஞ்சாம்புரம் என்ற இடத்தில் வாழ்க்கை நடத்தி வந்தனர். இருவரும் சேர்ந்து சிறுவனை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

  சிறுவனுக்கு போதிய உணவும் உடையும் கொடுக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டில் இருந்த முருகன், சிறுவனைப் பிடித்து முதுகு, கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாகக் கடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க...மாஸ்க் எங்கே? கேள்வி கேட்டதால் ஆத்திரத்தில் பயணிகள் முகத்தில் இருமிச் சென்ற பெண்(வீடியோ)

  சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, நித்திரவிளை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

  சசிகலாவிடம் சிறுவனுக்கு நடத்தப்பட்ட சித்ரவதைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான முருகனைத் தேடி வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: