TNPSC : டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழுக்கு இனி முதலிடம்!

டி.என்.பி.எஸ்.சி.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது.

  • Share this:
    டி.என்.பி.எஸ்.சி. வினா - விடைத்தாள், அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இந்தத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம், 1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது.

    TNPSC


    Read More : 10 ஆண்டு தலைவலியால் துடித்த நபருக்கு ஒரே நாளில் கிடைத்த தீர்வு... அட இது தெரியாம போச்சே!

    இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநில தொழில்நெறி மையத்தில் இணையவழிப் பயிற்சி அளிக்கிறது. இந்த இலவச இணையவழிப் பயிற்சி சிஸ்கோ (Cisco) செயலி வழியாகவும் பிரவுஸர் மூலமாகவும் நேரடியாக வழங்கப்படுகிறது.

    Must Read : ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ஷிவ் நாடார் ராஜினாமா

    இந்த பயிற்சி ஜூலை 5 முதல் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தப் பயிற்சியில் தேர்வுக்குத் தயாராவதற்கான பாடக் குறிப்புகளை வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும், அரசு அலுவலர்களே நடத்தும் மாதிரி நேர்முகத் தேர்வுகளும் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. தேர்வுக்குத் தயாராகுபவர்கள் இந்த இணையவழிப் பயிற்சியில் சேர்வதற்கு க்யு.ஆர். கோடை ஸ்கேன் செய்து பதிவுசெய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: