இதனைச் செய்யாத வரை இந்த அரசை மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? - ப.சிதம்பரம்

"எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது."

இதனைச் செய்யாத வரை இந்த அரசை மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? - ப.சிதம்பரம்
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
  • Share this:
ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான் அரசின் முதல் கடமை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கதில் அவர் கூறியதாவது: ”ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.

எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது. இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்?”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Also see:
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading