வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எம்ஜிஆர் நகர் 5 வது தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாயொன்று குட்டிகளை ஈன்றெடுதுள்ளது. அதில் ஒரு குட்டியானது அப்பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவரின் வீட்டிற்கு அருகிலுள்ள இடிபாடுகளுக்குள் தலைகீழாக சிக்கி மூன்று நாட்கள் தவித்து வந்தது.
அதைக் கண்ட ஜெய்சங்கர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். உடனடியாக காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் பால்பாண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர். பின்பு மீட்ட நாய்க்குட்டிக்கு தீயணைப்பு துறையினர் பால் ஊட்டிய மனிதாபிமான சம்பவம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
Read More : ஹோட்டல் உரிமையாளர் மீது முன்னாள் ஊழியர்கள் சரமாரி தாக்குதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ..!
மூன்று நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கிய தனது நாய்க்குட்டியை மீட்கும் போது தாய் நாய் அருகில் இருந்து பார்த்த காட்சி அனைவர் மனதையும் நெகிழ வைத்தது. நாய்க்குட்டியை தீயணைப்புத் துறையினர் அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்
செய்தியாளர்: செல்வம் , வேலூர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.