ஸ்டாலினை வரவேற்க சக்தி வாய்ந்த வெடிகள்: காவல் துறை அதிகாரி உட்பட பலருக்கு தீ காயம்

ஸ்டாலினை வரவேற்க சக்தி வாய்ந்த வெடிகள்: காவல் துறை அதிகாரி உட்பட பலருக்கு தீ காயம்

பட்டாசு

உளவுத்துறை காவல் அதிகாரி ஒருவருக்கு காலில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லபட்டார்.

 • Share this:
  தாம்பரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க நூற்றுகணக்கானோர் மத்தியில் சக்தி வாய்ந்த வெடிகள் வெடிக்கபட்டதால் காவல் துறை அதிகாரி உட்பட பலருக்கு தீ காயம். பொதுமக்கள் அலரியடித்து ஓட்டம் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பெண்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.

  சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தபோது, தாம்பரம் பிரதான சாலையான சண்முகம் சாலியில் உள்ள வணிக வளாகத்தின் மீது அதிக சக்திவாய்ந்த வெடிகள் வெடிக்கபட்டன.

  அப்போது அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து பெரும் புகையுடன் தீபொறிகள் சிதறின. இதில் அங்கு கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை காவல் அதிகாரி ஒருவருக்கு காலில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லபட்டார்.

  அதேபோல் பெறுமளவு தீபொறிகள் சிதரி சாலையிலிருந்த பெண்கள் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மீதும் விழுந்ததால் பலருக்கும் லேசான தீ காயங்கள் ஏற்பட்டதோடு, அச்சத்தில் அலறியடித்து மறைவுகளை தேடி ஓடியதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலர் காயமடைந்தனர்.

  Must Read : கமல்ஹாசன் கட்சி பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு - ரூ.8 கோடி பறிமுதல்

   

  இதனால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக தீவிபத்து பெரியளவில் ஏற்படாமல் தவிர்க்கபட்டது.
  Published by:Suresh V
  First published: