Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 99% மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதி மீறல்... ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 99% மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதி மீறல்... ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு நியமித்துள்ள தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு குழுவின் உறுப்பினர் ஜவஹர்லால் சண்முகம்

தமிழக அரசு நியமித்துள்ள தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு குழுவின் உறுப்பினர் ஜவஹர்லால் சண்முகம்

பல மருத்துவமனைகள் கட்டிடத்தின் அடிதளத்தை ( basement) விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துகின்றன. அரசு தனியார் என வித்தியாசம் இல்லாமல் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 99 விழுக்காடு மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக, தமிழக அரசு நியமித்துள்ள தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு குழுவின் உறுப்பினர் ஜவஹர்லால் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    நியூஸ் 18 -க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாட்டில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை தீயணைப்பு பாதுகாப்புக்காக ஆய்வு செய்துள்ளோம். 99% மருத்துவமனைகள் விதிகள் மீறியுள்ளன.

    கட்டிடத்தை சுற்றியிருக்க வேண்டிய set back space எனப்படும் புறவழி பெரும்பலான மருத்துவமனைகளில் இல்லை. அந்த இடத்தில் தான் வேறு கட்டுமானங்கள் நடைபெற்றுள்ளன.

    பல மருத்துவமனைகள் கட்டிடத்தின் அடிதளத்தை ( basement) விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துகின்றன. அரசு தனியார் என வித்தியாசம் இல்லாமல் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன.

    இதையும் படிங்க - தேர்த் திருவிழாக்களில் கடைபிடிக்க வேண்டிய விபத்து தடுப்பு முறைகளும், தேரின் அம்சங்களும்... ஒரு சிறப்பு பார்வை

    இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இது குறித்து முடிவு செய்யும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2018ம் ஆண்டு நானே குழுவின் சார்பாக சென்று இரண்டு நாட்கள் ஆய்வு செய்து 15பக்க அறிக்கை அளித்தேன். இந்த கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டத்தில் ஆச்சர்யமே இல்லை.

    ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்ற மருத்துவ உபகரணங்களுடன் வைக்கப்பட்டிருக்க கூடாது. வெப்பம் அதிகமாக வெளியிடும் சமையலறை இந்த கட்டிடத்துக்கு அருகிலேயே உள்ளது.

    இதையும் படிங்க - அதிவேகமாக வந்த சொகுசு கார் மீன் கடையில் மோதி விபத்து... தொழிலாளி உயிரிழப்பு

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ரூ. 12 கோடி அப்போது ஒதுக்கப்பட்டது. அதன் பின் மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து ரூ.110 கோடி மொத்தம் ஒதுக்கப்பட்டது.
    மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டது.



    எங்கள் குழுவின் பரிந்துரைகள் பெயரில் பல மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டன. பல மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் நிலைமை பரவாயில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Fire accident

    அடுத்த செய்தி