தண்டவாளத்தில் நடந்து சென்ற போது வந்த ரயில் - எஞ்சின் அடியில் சிக்கிய மூதாட்டி

தண்டவாளத்தில் நடந்து சென்ற போது வந்த ரயில் - எஞ்சின் அடியில் சிக்கிய மூதாட்டி
எஞ்சின் அடியில் சிக்கிய மூதாட்டி
  • News18
  • Last Updated: September 28, 2019, 1:00 PM IST
  • Share this:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் நேற்று மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளார்.

எதிரே ரயில் வந்ததும் அவர் தண்டவாளத்திலேயே படுத்துக்கொண்டார். இதனைக் கண்ட எஞ்சின் ஓட்டுநர், ரயிலை நிறுத்தினார்.


மிகச்சரியாக அவர் ரயில் எஞ்சினின் அடியில் சிக்கினார். இதனை அடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சில மணி நேரம் போராடி மூதாட்டியை மீட்டனர்.

 மூதாட்டி யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also See....

First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்