ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த சின்னகாமன் பட்டி கிராமத்தில் சூரிய பிரபா என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்படுகிறது. ஆலையில் வழக்கம் போல் ஊழியர்கள் இன்று பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Sankar
  First published:

  Tags: Sivakasi