ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஷாக்கில் காவல்துறை.. காத்திருப்போர் பட்டியலில் தீயணைப்புத்துறை டிஜிபி - திடீர் உத்தரவு!

ஷாக்கில் காவல்துறை.. காத்திருப்போர் பட்டியலில் தீயணைப்புத்துறை டிஜிபி - திடீர் உத்தரவு!

கிஷோர் ரவி

கிஷோர் ரவி

முறைகேடு புகார்கள் வந்த நிலையில் பிராஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகத் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு தீயணைப்புத்துறை துறை டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 8 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த பிராஜ் கிஷோர் ரவியை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக உள்ள சீமா அகர்வாலுக்கு, தீயணைப்புத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிராஜ் கிஷோர் ரவி, கரண் சின்ஹா ஓய்வுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

முறைகேடு புகார்கள் வந்த நிலையில் பிராஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகத் கூறப்படுகிறது. காவலர்கள் பயிற்சி பள்ளி டிஜிபி பணியிடம் காலியாக உள்ள நிலையிலும் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவரை நமது நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டப் போது, நீண்ட நாள் விடுமுறையில் செல்வதாகவும், வந்து பணியில் சேருவேன் எனவும் கூறினார்.சைலேந்திர பாபுவுக்குப் பிறகு, காவல்துறை இயக்குநராக பொறுப்பேற்பதற்கு பிராஜ் கிஷோர் ரவிக்கு வாய்ப்பிருந்த நிலையில், தற்போதைய நடவடிக்கையால் அது பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பர் வரை ரவிக்கு பணிக்காலம் உள்ளது குறிப்பிட்டத்தக்கது. தமிழ்நாட்டில் முதன் முறையாக கடந்த 2001 ஆம் ஆண்டு டிஜிபி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிஜிபியாக இருந்த ரவீந்திரநாத்தை, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சஸ்பெண்ட் செய்தது. உறவினர் ஒருவரிடம் காவல்துறையினரை பாலிசி எடுக்க வற்புறுத்திய புகாரில் ரவீந்திரநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அண்மையில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மற்றொரு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை வரலாற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Chennai Police