விருதுநகரிலுள்ள பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து

மாதிரிப் படம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில், 4 அறைகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

  • Share this:
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே இருந்துவருகிறது. இருப்பினும், பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர்ந்துவருகிறது. இந்தநிலையில், சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. தொடக்கத்தில் வெடி விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் 5-ஆக இருந்தநிலையில், பின்னர், 8, 11 என்ற அதிகரித்தது. இந்தநிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 லட்ச ரூபாயும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 லட்ச ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளனர்.

    இந்தநிலையில், சிவகாசியிலுள்ள மாரனேரி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று ஒரு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 4 அறைகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர், சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: