ஆட்சியர் அலுவலக ஆவண காப்பகம் அருகே தீ விபத்து.. ஆவணங்கள் கழிவறைக்குள் வந்தது குறித்து விசாரணை
ஆட்சியர் அலுவலக ஆவண காப்பகம் அருகே தீ விபத்து.. ஆவணங்கள் கழிவறைக்குள் வந்தது குறித்து விசாரணை
ஆட்சியர் அலுவலக ஆவன காப்பகம் அருகே தீ விபத்து
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை சார்பில் கூறப்படும் நிலையில் கழிவறைக்குள் எவ்வாறு ஆவணங்கள் சென்றன என்பது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த டி.ஆர்.ஓ விசாரணை செய்து வருகிறார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ஆவன காப்பகம் அருகே மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கழிவறைக்குள் வைத்திருந்த ஆவணங்கள் தீயில் எரிந்த நிலையில் ஆவணங்கள் கழிவறைக்குள் வந்தது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் ஆவன காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த 1980 ஆண்டுக்கும் முன்னதாக உள்ள பழைய அரசு ஆவணங்கள் முதல் இன்று வரையிலான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவண காப்பகத்தின் வாயிலில் இரு புறமும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை உள்ளது. இந்நிலையில் அந்த கழிவறையில் இருந்து புகை வருவதை கண்ட காவலாளி உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததுடன் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கழிவறையை திறந்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதனை தண்ணீர் ஊற்றி அனைத்ததுடன் ஆவண காப்பக அறை முழுவதும் சூழ்ந்திருந்த புகையை கண்டு அப்பகுதியும் தீப்பற்றியுள்ளதா? என ஆய்வு மேற்கொண்ட நிலையில் அதிர்ஷடவசமாக எந்த அசம்பாவிதமும் நிகழாத நிலையில் சன்னல்களை திறந்து புகையை வெளியேற்றினர்.
மேலும் கழிவறையில் இருந்த மின்கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை சார்பில் கூறப்படும் நிலையில் கழிவறைக்குள் எவ்வாறு ஆவணங்கள் சென்றன என்பது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த டி.ஆர்.ஓ விசாரணை செய்து வருகிறார்.
செய்தியாளர் : சிதம்பரநாதன் வி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.