ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குஷ்பு, காயத்ரி ரகுராம் குறித்து தரக்குறைவாக பேசிய விவகாரம்: திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

குஷ்பு, காயத்ரி ரகுராம் குறித்து தரக்குறைவாக பேசிய விவகாரம்: திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

மாதிரி படம்

மாதிரி படம்

குஷ்பு, காயத்ரி ரகுராம், நக்மா, கௌதமி ஆகியோரை தரகுறைவாக பேசியதாக புகார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாஜக நிர்வாகிகளான நடிகை குஷ்பூ, நக்மா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி சாதிக் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  பா.ஜ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க நிர்வாகியான சைதை சாதிக் மீது பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி சென்னை ஆர்.கே. நகரில் நடந்த திமுக கூட்டத்தில் பங்கேற்ற தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக், நிகழ்ச்சியின் மேடையில் பேசினார்.

  அப்போது, பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து தரக்குறைவான கருத்துக்களை பேசியுள்ளார். இதனை கண்ட பாஜகவினர் கடும் கோபத்திற்குள்ளாகினர்.

  தொடர்ந்து, இது குறித்து பாஜக மகளிர் அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

  இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,  கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: BJP, DMK, FIR Filed, Gayathri Raghuram, Kushboo, Kushbu, Tamilnadu