முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குஷ்பு குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி.. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

குஷ்பு குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி.. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மாதிரி படம்

மாதிரி படம்

பாஜக மகளிர் அணி சார்பில் கடந்த 29ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஜக நிர்வாகிகளான நடிகை குஷ்பூ, நக்மா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி சாதிக் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக். இவர், கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது பா.ஜ.க பெண் நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசினார். அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா தலைமையில் வந்த பெண் நிர்வாகிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகப் பேசிய தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார் தொடர்பான விசாரணை சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க பெண் நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமிதா, கெளதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய சம்பவத்தில் தி.மு.க வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி தரக்குறைவாகப் பேசுதல், பெண்களின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: BJP, Chennai, DMK, FIR Filed, Gayathri Raghuram, Kushboo, Nagma