முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிளப்பில் ஆட்டம்: மன்னிப்புக் கோரிய பிரதமர்

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிளப்பில் ஆட்டம்: மன்னிப்புக் கோரிய பிரதமர்

பிரதமர் சன்னா மரின் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாமல்  ஹெல்சின்கியில் உள்ள இரவு விடுதியில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி பொழுதை கழித்துள்ளார்.  இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 • 1-MIN READ
 • Last Updated :

  கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிளப்பில்  விடிய விடிய நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்லாந்து பிரதமர் சன்னா மரின்(Sanna Marin)  நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.

  பின்லாந்து நாட்டின் பிரதமராக சோசியல் டெமாக்ரட்டிக் கட்சியைச் சேர்ந்த சன்னா மரின் உள்ளார். இவரது அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

  இந்நிலையில், பிரதமர் சன்னா மரின் இதனை பின்பற்றாமல்  ஹெல்சின்கியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி உற்சாகமாக பொழுதை கழித்துள்ளார்.  இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து தனது செயலுக்கு முதலில் விளக்கம் கொடுத்த சன்னா மரின், தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

  எதிர்ப்புகள் குறையாததால் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பான முகநூல் பதிவில், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள கோரிய குறுஞ்செய்தி அலுவலக செல்போனுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதனை தான் வீட்டிலெயே வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் குறுஞ்செய்தியை பார்த்த பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி: தலிபான்கள் நன்றி

  First published: