தமிழக தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

தமிழக தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

மாதிரிப் படம்

தலைமை செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றாலோ, எச்சில் துப்பினாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தலைமை செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றாலோ, எச்சில் துப்பினாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், “தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி முககவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்கவழக்கமாகும். இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல் இனி தலைமை செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும்.

  அதன்படி தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும். அரசின் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும்” என தலைமை செயலக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன், கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

  Must Read : மத்திய அரசுக்கு மக்கள் உயிர் மீது அக்கறையில்லையா? மக்கள் உயிரைக் காத்திடுங்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்

   

  இந்நிலையில், நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: