அரசு உத்தரவை மீறி திருமணம்... ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்த அதிகாரிகள்

திருமணம்

சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள உத்தரவை மீறி அதிக நபர்களுடன் திருமணம் நடைபெற்றதால் அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்தனர்.

 • Share this:
  சென்னை புரசைவாக்கம் இராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள எம்.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் ஓட்டேரி கொசப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் இல்லத் திருமணம் நடைபெற்றது.

  மாநகராட்சியில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறி அனுமதி வாங்கி திருமண நிகழ்ச்சி நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் வருவாய்த் துறை அதிகாரி ஜஸ்டினா மற்றும் ஜோசப் தங்கராஜ் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருமண மண்டபத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது, அரசு உத்தரவை மீறி 200-க்கும் அதிகமான நபர்கள் திருமண நிழச்சியில் கலந்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிக கூட்டத்தை கூட்டியதன் காரணமாக மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.90,000, திருமண நடத்தியவர்களுக்கு ரூ10,000 என மொத்தமாக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பணத்தை வசூலித்து சென்றனர்.

  தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிதாக 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,48,064 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,48,064 ஆக உயர்ந்துள்ளது.

  இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

  Must Read : ஏழை நாடுகளில் வெறும் 0.3 சதவீத டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளன - உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

   

  முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்டம் கூடுதலைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் கொரானா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: