Coronavirus | கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம்

Youtube Video

தஞ்சாவூரில் தமிழக அரசின் நெறி முறைகளை முறையாக பின்பற்றாமல் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று வரை 14 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளை சேர்ந்த 225 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது, இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த லிட்டில் ஃப்ளவர் செகண்டரி ஸ்கூலில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கும், அதேபோல் ஆடுதுறையைச் சேர்ந்த ரைஸ்சிட்டி ஹையர் செகண்டரி ஸ்கூலில் படிக்கும் 7 மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளை சேர்ந்த 243 மாணவ மாணவிகளுக்கு தற்போது வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசின் நெறி முறைகளை, முறையாக பின்பற்றாமல், கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க... தொகுதியில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவம்: திமுக வேட்பாளர்

    செய்தியாளர்: எஸ்.குருநாதன் தஞ்சாவூர்

     

     

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: