ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சினிமா பைனான்ஸியர் அன்புசெழியனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

சினிமா பைனான்ஸியர் அன்புசெழியனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

சினிமா பைனான்ஸியர் அன்புசெழியனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வரி ஏய்ப்பு தொடர்பாக சினிமா பைனான்ஸியர் அன்புசெழியனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.

  பிகில் திரைப்பட வருவாயில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் உரிமையாளர், சினிமா பைனான்ஸியர் அன்புசெழியன், நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

  அன்புசெழியன் வீட்டில் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் 77 கோடி ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள் மட்டுமின்றி 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுதொடர்பாக நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அன்புசெழியன் ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

  இதனடிப்படையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாகி அர்ச்சுனா கல்பாத்தி, விஜயின் ஆடிட்டர் ஆகியோர் வருமானவரித்துறை முன்பு ஆஜராகி விளக்கமளித்தனர்.

  இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இன்று காலை விசாரணைக்கு ஆஜரானார். வருமானவரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Anbuchezhian