தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரின் பேரனுக்கு இப்படி ஒரு நிலையா..? உதவி புரிந்த முதல்வர்

சாய்ராம் - மு.க.ஸ்டாலின்

ஹரிதாஸ் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டராகக் கருத்தப்பட்டார்.

  • Share this:
    பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு மற்றும் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்படுள்ள செய்தி குறிப்பில், தமிழ் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகதவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக தமிழகத்தில் அன்றைய காலக்கட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944-ம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டராகக் கருத்தப்பட்டார்.

    Also Read : சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் அதிகாரங்கள் என்னென்ன? எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

    தமிழ் திரையுலகில் மிகப்பிரபலமாக அக்காலக்கட்டத்தில் விளங்கிய தியாகராஜ பாகவதர் அவர்களின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது மிகவும் வறிய நிலையில் குடியிருக்க வீடின்றி மிகவும் சிரமமாக சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாய்ராம் அவர்களின் குடும்ப்த்தினருக்கு அரசு சார்பில் குறைந்த வாடைகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லாட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 14 தான். அவற்றில் 10 படங்கள், வசூலில் சாதனை படைத்த படங்களாகும். ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3 ஆண்டுகள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.

    தியாகராஜ பாகவதர் திரைவாழ்க்கை சிறப்பாக இருந்தாலும் அவரது பொது வாழ்வு துன்பமாக அமைந்தது. 1944-ம் ஆண்டில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு சாதகமான தீர்ப்பைப் பெற்று விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் 1959-ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு 49 வயதில் காலமானார்.

    Also Read : ஜூலை 1 முதல் 7 முக்கிய மாற்றங்கள்.. உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்

    தியாகராஜ பாகவதர் செல்வ செழிப்பாக வாழ்ந்தாலும் அவருக்கு பின் அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். சமீபத்தில் தான் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் வந்து தங்களது குடும்பத்தினருக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: