Home /News /tamil-nadu /

தேவாலயங்களை பழுதுபார்க்க ரூ.3 லட்சம் அரசு நிதியுதவி - திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள கோவை ஆட்சியர் அழைப்பு

தேவாலயங்களை பழுதுபார்க்க ரூ.3 லட்சம் அரசு நிதியுதவி - திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள கோவை ஆட்சியர் அழைப்பு

கிறித்துவ தேவாலயம்

கிறித்துவ தேவாலயம்

கிறித்துவ தேவாலயங்களை பணிகளுக்காக தேவாலய கட்டடத்தின் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு வயதிற்கேற்ப அரசின் மானிய தொகையாக ரூ.1 இலட்சம் முதல் ரூ. 3 இலட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்க்க தமிழக அரசு செலவில் 3 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலய கட்டடத்தின்  வயதிற்கேற்ப அரசின் மானிய தொகையாக ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்:

    1. கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    2. தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

    இவ்விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. பிற்சேர்க்கை II & III -80 பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது பிற்படுத்தப்பட்டோர் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    (மேற்குறிப்பிட்ட படிவத்தினை அலுவலகத்தில் பெற்றும் விண்ணப்பிக்கலாம்) மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்களை பார்வையிட்டு கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிறித்துவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு, அனைத்து கிறித்துவ அமைப்பை சார்ந்த தேவாலய பாதிரியார்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Christianity, DMK, MK Stalin

    அடுத்த செய்தி