ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜி.எஸ்.டி. கவுன்சில்: பிடிஆருக்கு முக்கிய பொறுப்பு!

ஜி.எஸ்.டி. கவுன்சில்: பிடிஆருக்கு முக்கிய பொறுப்பு!

 பிடிஆர் பழனிவேல்

பிடிஆர் பழனிவேல்

தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள சிக்கல்களை சரி செய்வது, எய்ப்பு நிகழ்வதற்கான சாத்தியமான ஆதாரங்கள்  அடையாளம் காண்பது,  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வில் இருக்கக் கூடிய சிக்கல்களை களைவது குறித்த நடவடிக்கைகளில் இந்த குழு ஈடுபடும்,

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜி.எஸ்.டி கவுன்சிலின் சீர்த்திருதக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்ச்இலின் சீர்த்திருத்த குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவின் தலைவராக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதித்துறை அமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தகத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங், ஒடிசா மாநில நிதித்துறை அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி ஆகியோரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள சிக்கல்களை சரி செய்வது, எய்ப்பு நிகழ்வதற்கான சாத்தியமான ஆதாரங்கள்  அடையாளம் காண்பது,  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வில் இருக்கக் கூடிய சிக்கல்களை களைவது குறித்த நடவடிக்கைகளில் இந்த குழு ஈடுபடும்,

சர்ச்சையை தொடர்ந்து பதவி

45ஆவது ஜி.எஸ்.டி. கூட்டம் கடந்த 17ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளாததும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்காக பாஜக உள்ளிட்ட கட்சிகள் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

இதையும் படிங்க: 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - மு.க.ஸ்டாலின்

திமுகவின் செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான   டிகேஎஸ் இளங்கோவன் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றிருக்க வேண்டும், அவர் ஏன் பங்கேற்காமல் இருந்தார் என எனக்கு புரியவில்லை. நிதியமைச்சர் தான் ஜிஎஸ்டி கவுன்சிலின் பிரதிநிதி, அவர் கலந்துகொள்ளாமல் இருந்தது குறித்து எனக்கு புரியவில்லை” என்று கூறியிருந்தது இந்த விவகாரத்தில் மேலும் பேசுபொருள் ஆனாது.

மேலும் படிக்க: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு : 2,981 பேர் போட்டி இன்றி தேர்வு

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்துகொள்ளாதது தொடர்பான விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஜி.எஸ்.டி. கவுன்சிலின் சீர்த்திருத்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Finance minister, GST council, Tamilnadu