ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாநிலத்தின் வரி வருவாய் அதிகரிப்பு - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மாநிலத்தின் வரி வருவாய் அதிகரிப்பு - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

கோவிட் பெரும் தொற்றின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதன் காரணமாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மேம்பட்டுள்ளதாக வரவு செலவு திட்டம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிட் பெரும் தொற்றின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதன் காரணமாக மாநிலத்தின்  வரி வருவாய் மேம்பட்டுள்ளதாகவும், வரி அல்லாத வருவாய் பெரிய அளவில் முன்னேற்றம் காட்டவில்லை என 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத கால வரவு செலவு தொடர்பாக ஆய்வு செய்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆய்வு அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில் , இந்திய அரசின் உதவி மானியங்கள் மற்றும் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு உட்பட 2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் மொத்த வருவாய் 2 லட்சத்து 31 ஆயிரத்து 407 கோடி. மேலும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 143 கோடியாக உள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாயை விட 31.61% அதிகம்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயாக 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சொந்த வரி வருவாய் 72 ஆயிரத்து 441 கோடி . 2021-22 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாயோடு ஒப்பிடும் போது 36.92% அதிகம். மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பெறப்பட்ட வருவாய் 5 ஆயிரத்து 994 கோடி. இது 2021-22 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாயை காட்டிலும் 50.83% அதிகம்.

மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக, 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 15 ஆயிரத்து 341 கோடி பெறப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாயை காட்டிலும் 44.58 % அதிகம். கொரோனா பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரம் மீண்டும் முன்னேறியதன் விளைவாக அதிகரித்துள்ளது.

செலவீனங்கள்:

2022-23 ஆம் தேதி நிதியாண்டில் கணக்கிடப்பட்ட மொத்த வருவாய் கணக்கு செலவினமான 2 லட்சத்து 84 ஆயிரத்து 188 கோடியில், 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 328 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 40.93% ஆகும். இது 2021-22 ஆம் நிதி ஆண்டில் இதே காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவீனத்தை விட 22.93% அதிகம். சம்பளம், ஓய்வூதியம், மற்றும் வட்டி செலுத்துதல் போன்றவை அதிகரித்ததன் காரணமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் பாதகமான தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டுள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக 2022-23 ஆண்டிற்கான முதல் ஆறு மாத வரவுகளின் போக்கு வரவு செலவு திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமையான செலவின மேலாண்மை காரணமாக வருவாய் செலவீனங்கள் 2022-23 வரவு செலவு திட்ட மதிப்பீட்டினைவிட குறைந்துள்ளது.

கோவிட் பெரும் தொற்றின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதன் காரணமாக வணிக வரிகள், மாநில கலால் வரி மற்றும் மோட்டார் வாகன வரிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மேம்பட்டுள்ளது. எனினும் வரி அல்லாத வருவாய் பெரிய அளவில் முன்னேற்றம் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Minister Palanivel Thiagarajan, TN Assembly