ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

10 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு தெரிந்து நடந்ததா? ஒ.பி.எஸ்க்கு அமைச்சர் பிடிஆர் கேள்வி

10 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு தெரிந்து நடந்ததா? ஒ.பி.எஸ்க்கு அமைச்சர் பிடிஆர் கேள்வி

அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

முல்லை பெரியாறு பாசன பகுதிகளில் 10 ஆண்டுகளாக நடைபெற்ற தண்ணீர் திருட்டு ஒ.பன்னீர்செல்வத்துக்கு தெரிந்து நடந்ததா? அல்லது தெரியாமல் நடந்ததா? என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முல்லை பெரியாறு அணையிலிருந்து முறைகேடாக மின் மோட்டார்கள் வழியே தண்ணீர் திருடப்பட்டு வருவது குறித்தும் மற்றும் முல்லை பெரியாறு லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர்  கொண்டு வரும் திட்டம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரை - தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியார்களிடம் பேசுகையில்,

2016 ல் நான் எம்.எல்.ஏ வாக இருந்த போது முல்லை பெரியாறு பாசன பகுதிகளில் தண்ணீர் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்தேன், ஆய்வில் முறைகேடாக தண்ணீர் திருடப்பட்டது தெரிய வந்தது, தண்ணீர் திருட்டு தொழிலாக நடந்து கொண்டு இருந்தது, தண்ணீர் திருட்டு குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினேன்.

Also Read : பா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பன்னீர் செல்வம்

தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் திருட்டு நிறுத்தப்பட்டதால் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைத்தது. ஜெயலலிதா இறப்புக்கு பின் மீண்டும் தண்ணீர் திருட்டு தொடர்ந்தது, பல துறைகளில் புகார் கொடுத்தும், வழக்கு தொடர்ந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

தண்ணீர் திருட்டை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார், அதன் அடிப்படையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆய கட்டு பகுதிகளில் 527 இடங்களில் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. அதிவேக மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. தண்ணீர் திருட்டால் ஒரு நாளுக்கு 30 இலட்சம் ரூபாய் அளவிற்கு மின்சாரத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீர் திருட்டால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெளிப்படை தன்மையுடன் தண்ணீர் திருட்டு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும். தண்ணீர் திருட்டு என்பது சமுதாய துரோகம். 10 ஆண்டுகளாக 2016 ஆம் ஆண்டில் இருந்து தண்ணீர் திருட்டு தொடர்ந்து வருகிறது. தண்ணீர் திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். தேனி மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் திருட்டு தொடர்பாக அறிக்கை கேட்டு உள்ளேன். 1,295 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணியிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் அம்ரூத் திட்டம் 2023 மே மாதத்துக்குள் பயன்பாட்டு கொண்டு வரப்படும்.கொரோனா 2 ஆம் அலையால் இத்திட்டம் காலதாமதம் ஆனது.

Also Read : தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி?

முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே முல்லை பெரியாறு தண்ணீர் திருட்டு தொடர்பாக முழு விபரங்கள் தெரிய வரும். முல்லை பெரியாறு ஆய கட்டு பகுதிகளில் தண்ணீர் திருட்டு, மின்சார திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தண்ணீர் திருட்டு, மின்சார திருட்டு உள்ளிட்ட திருட்டுகளால் நிதித்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் மூத்த அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் தண்ணீர், மின்சாரம் திருடப்பட்டது, முன்னாள் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு திருட்டு தெரியாமல் நடந்ததா? தெரிந்து நடந்த்தா என தெரியவில்லை என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: DMK, O Panneerselvam