• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜிஎஸ்டி கூட்டத்தில் பி.டிஆர் பங்கேற்றிருக்க வேண்டும்- திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன்

ஜிஎஸ்டி கூட்டத்தில் பி.டிஆர் பங்கேற்றிருக்க வேண்டும்- திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன்

PTR Palanivel thiyagarajan

PTR Palanivel thiyagarajan

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றிருக்க வேண்டும், அவர் ஏன் பங்கேற்காமல் இருந்தார் என எனக்கு புரியவில்லை.

  • Share this:
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறுகிய காலத்தில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து பல முறை சர்ச்சை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கு கடுமையான பாணியில் பதிலடி கொடுத்து வருவது தான் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

சத்குரு ஜக்கி வாசுதேவ், பாஜகவின் வானதி சீனிவாசன் போன்றோருடன் பிடிஆர் கருத்து மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அவர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிஆர் சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லாமல் இருந்ததை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அண்ணமாலையின் இந்த கருத்தை எதிர்கொண்ட பிடிஆர் கடும் சொற்களால் அவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து திமுக எம்.பியும் செய்தித்தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன் ஆங்கில  ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுலபமாக கோபமடைந்துவிடுகிறார், அவருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கியிருப்பார் என தெரிவித்துள்ளார்.



“எதிகட்சியினர் அவரை ஆத்திரமூட்டும் வகையில் பேசும்போது அவர் எளிதாக கோபமடைந்துவிடுகிறார். அதனால் அவருக்கு கட்சித் தலைவர் (முக.ஸ்டாலின்) அறிவுரைகள் வழங்கியிருப்பார். எங்கள் தலைவர் அவரை கண்காணித்து வருகிறார். அவரை மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களையும் அவர் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

Also Read:  ‘250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட்’ – சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர்கள்

இது குறித்து பிடிஆருக்கு நானும் அறிவுரைகள் வழங்கியிருக்கிறேன். அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருந்து செயல்பாட்டை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், சண்டைகளை அல்ல. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றிருக்க வேண்டும், அவர் ஏன் பங்கேற்காமல் இருந்தார் என எனக்கு புரியவில்லை. நிதியமைச்சர் தான் ஜிஎஸ்டி கவுன்சிலின் பிரதிநிதி, அவர் கலந்துகொள்ளாமல் இருந்தது குறித்து எனக்கு புரியவில்லை” இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: