நிதிநிலை பற்றாக்குறை விவகாரம் - புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதிநிலை பற்றாக்குறை தொடர்பாக புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

  • Share this:
வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும், நிதிநிலை பற்றாக்குறையை மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு வரை குறைப்பதற்காக வரம்பினை 2024 நீட்டிப்பதற்கான சட்ட முன்வடிவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்திற்கு முன்னதாக நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் பழனிவேல் தியாகராஜன். 15ஆம் நிதிக் குழுவானது தனது 2021-26 கான அறிக்கையில் எரிசக்தி துறை குறித்த சில செயல்திறன் அளவுகோலின் அடிப்படையில் 2021 -2022 முதல் 2024 -25 வரையிலான கால அளவினை உள்ளடக்கிய பரிந்துரை காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் மாநிலங்கள் ஆண்டொன்றுக்கு மாநில உற்பத்தி மதிப்பில் 0.05 விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுவதற்கான வழிவகை பரிந்துரைத்துள்ளது.

மேலும் நிதிக் குழுவானது மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன்களுக்கான வரம்பினை 2021- 22, 22 -23 மற்றும் 23 -24 முதல் 2025 -26 ஆண்டுகளில் முறையே 4 விழுக்காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காடாக பரிந்துரைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும் நிதிநிலை பற்றாக்குறையை மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு வரை குறைப்பதற்காக வரம்பினை 2024 மார்ச் 31 வரை நீட்டிக்க 2003ஆம் ஆண்டு நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published: