அதிமுக எம்.எல்.ஏ.விடம் மன்னிப்பு கேட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது ஆவேசமாக பேசியதால் அதிமுக எம்.எல்.ஏவிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்டார்.

  • Share this:
பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டவை  நிதி அறிக்கையில் இடம்பெறாதது  ஏன் என்று கடுமையான வார்த்தைகளால் கேள்வி எழுப்பினார். அப்போது  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக பதிலளித்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதனால் கடந்த பத்து வருடங்களாக 40 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை என்னா ஆனது? எந்த ஆவணத்திலும் ஏன் குறிப்பிடப்படவில்லை ?என்று கேள்வி எழுப்பினார். அரசு பெற்ற கடன் தொடர்பாக தொடர்ந்து நீண்ட விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது கடன் பற்றி பேசும் நீங்கள் எந்த அடிப்படையில் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தீர்கள் என்றும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது எங்கு இருந்தீர்கள்? என்று அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய  நிதியமைச்சர், உங்கள் ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது  கடன் சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பின்பு தான் ஆவணங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது தான் உங்கள் ஆட்சியில் கடன் சுமை பற்றிய பல வித்தியாசங்கள் தெரியவருகிறது என்றார்.

Also Read : மு.க.அழகிரி பாஜகவில் இணைகிறாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

அப்போது குறுக்கிட்டு  பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் விளக்கம் அளிக்கும்போது சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்  என்றார். அதற்கு அவை முன்னவர் துரைமுருகன், இதே கருத்தை நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது  நாங்கள் ஆயிரம் முறை கேட்டிருக்கிறோம். நாங்கள் கேள்வி எழுப்பிய பின்பு டீ குடித்துவிட்டு வரும் வரை, உங்கள் அமைச்சர்கள் பதில் அளித்து கொண்டு இருப்பார்கள் என்று தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Also Read : தமிழக சட்டமன்ற கூட்ட நாட்கள் குறைப்பு - மானிய கோரிக்கை நிகழ்ச்சி நிரல்

இதையடுத்து பல நிபுணர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் இரவு பகலாக வெள்ளை அறிக்கையை தயாரித்ததாகவும்,  எனவே தான் உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு தான் ஆவேசமாக பேசியதாவும், பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென்டும் என்றார். அதோடு அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம்  மன்னிப்பு கேட்பதாகவும்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அப்போது  பேசிய சபாநாயகர், அமைச்சர் பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து  நீக்கப்பட்டாலும், பெருந்தன்மையுடன் அமைச்சர்  மன்னிப்பு கேட்டுள்ளதாக பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: