Tamil Nadu Budget 2021 : அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்படும் - ஓ.பி.எஸ்!

ஓ.பன்னீர்செல்வம்

அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20,00,000 ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் நீட்டிக்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

2021 - 2022ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில், தற்போதைய ஒட்டுமொத்த காப்பீட்டு தொகையான 4,00,000 ரூபாய் 5,00,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகை 7,50,000 ரூபாயிலிருந்து 10,00,000 ரூபாயாக உயர்த்தப்படும் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு மொத்தம் 20,00,000 ரூபாய் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Also read... புயல் நிவாரண நிதியை தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

மேலும் புரட்சி தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு துவக்கி வைத்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான முழு நிதியையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 55.67,000 தகுதியான குடும்பங்களுக்கு, குடும்ப தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2,00,000 ரூபாயும், குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு 4,00,000 ரூபாயும், நிரந்தர இயலாமக்கு 2,00,000 ரூபாயும் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: