Home /News /tamil-nadu /

பட்ஜெட் ஆவணங்களை ஏன் சூட்கேஸில் எடுத்துச் செல்லவில்லை? நிர்மலா சீதாராமன் விளக்கம்

பட்ஜெட் ஆவணங்களை ஏன் சூட்கேஸில் எடுத்துச் செல்லவில்லை? நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

”இங்கு எங்கும், எதிலும் இந்தி திணிப்பு என்பதே இல்லை”

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் பல விதத்திலும் இந்தி திணிப்பு உள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உலக அளவிலான நகரத்தார் வர்த்தக மாநாடு 2019 நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நகரத்தாருக்கு மட்டுமே மத்திய பட்ஜெட்டின் முழு விவரம் தெரியும் என்று கூறினார்.

    தென்கிழக்கு ஆசியாவில் பல பகுதிகளில் அந்த நாட்டின் சின்னங்கள், கலாச்சாரங்கள் நகரத்தார் மூலம் உருவாக்கப்படுகிறது. தஞ்சாவூர் கோவில் போன்று தென்கிழக்கு ஆசியாவில் பல கோவில்கள் பிரமாண்டமாக உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    மேலும், தமிழகத்தில் வட இந்தியர் ஆதிக்கம், இந்தி திணிப்பு என எவ்வளவு பேசினாலும், நாடு ஒன்று தான். இந்தியா ஒன்று தான் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நம் தலைமுறைக்கு பண்பும், பண்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்திய பிரதமர் மோடி சொல்வது போல் நம்மிடையே அனைத்து வகையான திறமைகள்(business, technical skills) இருப்பதால்தான் அடுத்து வரும் தலைமுறையினருக்கு நாம் விஷ்வ குருவாக விளங்க முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சூட்கேஸ் எடுத்து செல்லாதது குறித்து மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டது. சூட்கேஸ் என்றால் எனக்கு வேறு ஒன்று நினைவுக்கு வந்தது. சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை என்றும், மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை என்றும் எனக்கு தோன்றியது. அதனால் தான் சூட்கேஸில் எடுத்து செல்லவில்லை என்று அவர் தெரிவித்தார்.



    தொழில் செய்ய அரசு என்ன உதவி செய்தது என்பதை பற்றி பேசுவதை விட, அரசுடன் இணைந்து முறையான பயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது. இந்திய வளர்ச்சிக்கு இளைஞர்கள் தொழில் செய்வது மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் தொழில் முறைவோருக்கு அதிகளவு பயன்கள் இடம்பெற்றுள்ளன என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், உலகளவில் பாரத நாட்டின் புகழை எடுத்து சொன்னவர்கள் நகரத்தார்கள் எனக் கூறினார்.

    பல விதத்திலும் இந்தி திணிப்பு உள்ளது என்பது தவறான குற்றச்சாட்டு என்ற அவர், இங்கு இந்தி திணிப்பு இல்லை என்றார்.

    மேலும் மோடி அரசில் ஸ்ரேஷ்டபாரத் என்கிற நிகழ்ச்சி மூலம் வட மாநிலத்தில் தமிழை கற்று தரப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

    ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து, சுதந்திர நாட்டில் யார் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதனை சிறப்பாக செயல்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக மாற்றிய மாநிலங்களும் எடுத்துக்காட்டாக இங்கு உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Nirmala Sitharaman

    அடுத்த செய்தி