ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்!

தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்!

 டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் பேசிய நிதியமைச்சர்

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் பேசிய நிதியமைச்சர்

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் கூட பணத்தை மையப்படுத்தி சில தனியார் மருத்துவ மனைகள் செயல்பட்டது என நிர்மலா சீதராமன் வருத்தம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் எனவும், தாய்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவ மாணவர்கள் 7 ஆயிரத்து 276 பேரும், பல் மருத்துவ மாணவர்கள் ஆயிரத்து 893 பேரும் பட்டம் பெற்றனர்.

இதையும் படிங்க: பாஜக மாநில செயலாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

ஆயுஷ் மருத்துவம் படித்த மாணவர்கள் ஆயிரத்து 519 பேரும், செவிலியர், மருந்தியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 29 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் பங்கேற்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் கூட பணத்தை மையப்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டது வருத்தமளித்ததாக கூறினார்.

மேலும் தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் எனவும், தாய்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

First published: