Home /News /tamil-nadu /

செல்போன், லேப்டாப்பிலேயே தேர்வு எழுதலாம் - பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேதி அறிவிப்பு

செல்போன், லேப்டாப்பிலேயே தேர்வு எழுதலாம் - பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேதியை அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கொரோனோ பரவல் காரணமாக இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும்  இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

முதல்முறையாக இந்தத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் எனவும் அதேபோல விடைகளை தேர்ந்தெடுத்து பதில் அளிக்க கூடிய வகையில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கொண்டதாக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் முறை தேர்வு என்பதால் மாணவர்கள் தங்களுடைய செல்போன், கணினி, லேப்டாப் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செமஸ்டர் தேர்வுகள் துவங்குவதற்கு முன் ஆன்லைன் முறையில் பயிற்சித் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Anna University, Engineering student

அடுத்த செய்தி