முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில், 2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

மேலும் படிக்க...கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை...

தற்போது, பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Nadu, TN Assembly Election 2021, Voters list