திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாடகர் எஸ்.பி.பிக்கு, சிலை வைக்க கோரிக்கை..

40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடிய SPB, எளிமையாக வாழ்ந்தவர் என இசையமைப்பாளர் எஸ்.ஏ ராஜ்குமார் தெரிவித்தார்.

40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடிய SPB, எளிமையாக வாழ்ந்தவர் என இசையமைப்பாளர் எஸ்.ஏ ராஜ்குமார் தெரிவித்தார்.

 • Share this:
  திரைப்பட இசைக் கலைஞர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை வடபழனி இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. தலைவராக இசையமைப்பாளர் தீனாவும், பொருளாளராக மகேஷூம் பதவியேற்றுக் கொண்டனர்.

  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் பாக்யராஜ், இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் உருவப்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

  பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், தமது பாடல்களால் உலகளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் SPB என புகழாரம் சூட்டினார். SPBக்கு சிலை வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரோ, திரை இசைக்கலைஞர்களோ கேட்டுக் கொண்டால், இசைக்கலைஞர்கள் சங்க கட்டடத்தில் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

  தொடர்ந்து பேசிய நடிகர் பாக்யராஜ், திறமை, செயல் என இரண்டிலும் சிறந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றும், நேர்மறை எண்ணம் கொண்ட அவர் விளம்பர நோக்கம் இல்லாமல் பல பாடகர்களுக்கு உதவியவர் என குறிப்பிட்டார். 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடிய SPB, எளிமையாக வாழ்ந்தவர் என இசையமைப்பாளர் எஸ்.ஏ ராஜ்குமார் தெரிவித்தார். மேலும், மகா கலைஞனான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தலைக்கனம் இல்லாமல் வாழ்ந்தவர் என்றும் ராஜ்குமார் பாராட்டினார்.

  மேலும் படிக்க...5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி...

  அப்போது மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிக்கு சிலை வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: