விபச்சார பணத்தை பங்கு போடுவதில் சண்டை... இளைஞரை தீ வைத்து எரித்து மும்பை தப்பி செல்ல முயன்ற இளம்பெண்

விபச்சார பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தீ வைத்து எரிக்க முயற்சித்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

விபச்சார பணத்தை பங்கு போடுவதில் சண்டை... இளைஞரை தீ வைத்து எரித்து மும்பை தப்பி செல்ல முயன்ற இளம்பெண்
விபச்சார பணத்தை பங்கு போடுவதில் சண்டை
  • Share this:
சென்னை அசோக் நகர் ராகவன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவர் தீக்காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதாக அக்கம்பக்க குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த குமரன் நகர் போலீசார் வாலிபரை மீட்டு முதலுதவி அளித்தனர். விசாரணையில் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டு தி.நகரில் துணி வியாபாரம் செய்து வரும் தீபக் , அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தது தெரியவந்தது.

மேலும் சமைக்கும் பொழுது திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார். பின்னர் போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதால் சந்தேகமடைந்த போலீசார் அவரது அறையை சோதனை செய்த போது ரத்த கரைகளோடு கூடிய கத்தி மற்றும் தரையில் ரத்தம் மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஆகியவை கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார்  தீபக்கின் செல்போன்களை ஆய்வு செய்தனர்.


அதில் அவர் அடிக்கடி பேசும் இரண்டு எண்களுக்கு சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது இரண்டு எண்களும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினர். அதில் இரண்டாம் தளத்திலிருந்து சந்தேகப்படும்படியான ஒரு ஆணும் பெண்ணும் வெளியே வருவது தெரியவந்தது. விமான நிலையம் அருகே அவர்கள் இருப்பதை அறிந்த போலீசார் இரவு ரோந்து பணியில் இருந்த கிண்டி காவல் உதவி ஆணையர் சுப்புராயன் மற்றும் தரமணி காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோருக்கு சிசிடிவி காட்சிகள் அனுப்பி வைத்து விவரத்தைக் கூறி உள்ளனர்.

விமான நிலையம் சென்ற உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்த இளம் பெண்ணையும் வாலிபரையும் பிடித்தனர். பின்னர் குமரன் நகர் போலீசார், அங்கு விமான நிலைய போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த வாலிபரையும், இளம் பெண்ணையும் குமரன் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட இருவரும் டெல்லியை சேர்ந்த ஹேமந்த் மற்றும் நிலா அக்தர் என்பது தெரியவந்தது.மேலும் தீபக்கும் ஹேமந்தும்  தி.நகரில் துணி வியாபாரம் செய்து வருவதும் நாளடைவில் வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லை என்பதால் ஹேமந்த் வழிகாட்டுதல்படி மும்பை டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகளை வரவழைத்து விபச்சாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. அவ்வாறு அறிமுகமானவர்தான் நிலா, இவர்கள் வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரும் அழகிகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே சென்னையில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி உடனடியாக அவர்களை விமானம் மூலம் அவர் மாநிலத்துக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த வகையில் நிலாவை நேற்று முன்தினம் இரவு அவரது சொந்த ஊரான டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் நிலா மூலம் விபச்சாரத்தில் கிடைத்த பணத்தை பங்கு போடுவதில் தீபக் மற்றும் ஹேமந்த் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த் நிலாவின் உதவியுடன் தீபக்கை கத்தியால் தாக்கியும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியும் அவரை கொலை செய்ய முயற்சி செய்து அங்கிருந்து இருவரும் தப்பித்து மும்பை செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading