அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அவர் ஆங்காங்கே திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டது. பொள்ளாச்சி என்ற பெயரை கூறவே பலர் கூச்சப்படுகின்றனர் என்றார்.
இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், தாம் முதலமைச்சரானது விபத்து எனக் கூறிய ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் ஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து என்றும் பதிலடி கொடுத்தார்.
அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்துவிட்டு மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால் ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது எனவும், திமுகவின் திண்ணைப் பிரசாரத்தால் ஒரு பயனும் இல்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.