நாகையில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த விவகாரத்தில், நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியில் நடுக்கடலில் கீச்சாங்குப்பம் மீனவர்கள், விசைப்படகில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு சென்ற வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பைபர் படகில் சென்று அந்த படகை வழிமறித்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதற்கு கீச்சாங்குப்பம் மீனவர்கள் மறுப்பு தெரிவித்து, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி இருரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
மேலும் பைபர் படகுகள் மீது கீச்சாங்குப்பம் பகுதி மீனவர்கள் விசைப்படகுகளை கொண்டு மோதினர். இந்த சம்பவத்தில் 2 பைபர் படகுகள் சேதம் அடைந்து கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இந்த பயங்கர மோதலில் 6 மீனவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வெள்ளப்பளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏராளமான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க நாகை துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோதல் சம்பவத்தை கண்டித்து, வெள்ளப் பள்ளம், ஆறுகாட்டுத்துறை, வானவன் மகாதேவி, புஷ்பவனம் உள்ளிட்ட 4 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read:
வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!
கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!
வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.