ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்குவதில் மோதல்! கத்திக்குத்து வரை சென்ற மாணவர்கள்...

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்குவதில் மோதல்! கத்திக்குத்து வரை சென்ற மாணவர்கள்...

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்குவதில் மோதல்! கத்திக்குத்து வரை சென்ற மாணவர்கள்...

Chennai | இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்குவதில் ஏற்பட்ட மோதல் கல்லூரியில் கத்திக்குத்து வரை சென்றுள்ளது திடுக்கிடும் சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னையடுத்த பல்லாவரத்தில் இந்த வித விதமான இன்ஸ்டா வீடியோ ரீல்கள் தான் ஒரு கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்யும் அளவு தூண்டியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 19 வயதான சார்லஸ் மற்றும் 19 வயதான பிரியதர்ஷன். இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி, ஒரே பள்ளியில் படித்து, பின்பு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் போட்டி போட்டுக்கொண்டு ரீல்ஸ் வீடியோ விடுவதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர்.

இதில் சார்லஸ் வெளியிடும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் வந்துள்ளது. கல்லூரி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் நண்பர் சார்லஸ்க்கு கிடைக்கும் வரவேற்பு அளவு பிரியதர்ஷனுக்கு கிடைக்கவில்லை இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே வீடியோ வெளியிடுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரியதர்ஷன் ,சார்லஸை இனி நீ வீடியோ வெளியிடக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் இதைகண்டுக்கொள்ளாத சார்லஸ் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியதர்ஷனை கிண்டல் செய்வது போன்று கே.ஜி.எப் படத்தில் வரும் வசனத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Read More : சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்!

இதை பார்த்து மேலும் ஆத்திரமடைந்த பிரியதர்ஷன் ,சார்லஸை பலிவாங்க நினைத்துள்ளார். அதற்காக கடந்த 23 ஆம் தேதி கத்தி உள்ளிட பயங்கர ஆயுதங்களுடன் பிரியதர்ஷன், சில நண்பர்களுடன் கல்லூரி வாசலில் காத்திருந்துள்ளார். மதியம் கல்லூரி முடிந்து சார்லஸ் வெளியே வந்ததும் இந்த கும்பல் அவரை தாக்க முயன்றுள்ளது . ஆனால் சார்லஸ் மீண்டும் கல்லூரி உள்ளே ஒடி தப்பிக்கொண்டார்.

ஆனாலும் அடங்காத கொலை வெறிகும்பல் சார்லஸுன் நண்பர் ஒருவரை கத்தியால் தலை ,கை,கால்களில் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்ட சகமானவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார் கல்லூரி மாணவரை தாக்கிய தாம்பரம் பகுதியை சேர்ந்த 19 வயதான பிரணவ் ,புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயதான தமிழரசு, 19 வயதான சந்தோஷ் ,19 வயதான நந்தகுமார் மற்றும் ஒரு சிறுவர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக  உள்ள பிரியதர்ஷன் உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகின்றடனர்.

First published:

Tags: Chennai